என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பசுவைவழி சாலை
நீங்கள் தேடியது "பசுவைவழி சாலை"
சென்னை - சேலம் இடையே 8 வழி பசுமை விரைவு சாலை அமைத்தால் 30 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில கமிட்டி உறுப்பினர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி:
சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்பட உள்ளது.
பசுமை விரைவு சாலை அமைத்தால் 66 கிலோ மீட்டர் தூரம் மிச்சமாகும். தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வாகனங்கள் கடக்கின்றன.
பசுமை வழி சாலை அமைத்தால் இந்த தூரம் 274 கிலோ மீட்டராக குறையும். 3 மணி நேரம் முதல் 4 மணி நேரத்தில் இந்த பயண தூரத்தை கடந்து விடலாம். இந்த விரைவு சாலை தாம்பரத்தில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி, போளுர், ஆரணி, செங்கம் வழியாக தருமபுரி மாவட்டத்தில் அரூர், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி வழியாக மஞ்சவாடி கணவாயை அடைகிறது.
பின்னர் சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டிணம், வரகம்பாடி, எருமா பாளையம், நிலவாரப்பட்டி, கெஜ்ஜல் நாயக்கன்பட்டி வழியாக சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து சேலம் -கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் பகுதியில் முடிவடைகிறது.
இந்த பசுமை வழிச்சாலை அமைக்க தருமபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் நிலங்கள் கையப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலை அமைத்தால் 30 ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு (லெனினிஸ்டு) மாநில கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன் கிருஷ்ணகிரயில் நிருபர்களிடம் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சென்னை - சேலம் 8 வழி பசுமைசாலை அமைத்தால் விவசாய நிலங்கள் அழிந்து விடும். பண்ணை நிலங்கள், மாந்தோப்புகள், மரங்கள் அழிக்கப்படும். நெல் மற்றும் காய்கறி பயிரிடும் விவசாய நிலங்களும் அழிக்கப்பட்டு விடும். இதனால் 30 ஆயிரம் விவசாய குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள். எனவே இந்த பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்.
ஏற்கனவே சென்னை - சேலம் இடையே பல்வேறு சாலைகள் உள்ளன. சென்னையில் இருந்து விழுப்புரம், ஆத்தூர் வழியாக ஒரு சாலை உள்ளது. சென்னையில் இருந்து பூந்தமல்லி, வேலூர், வாலாஜா, திருப்பத்தூர், அரூர் வழியாக ஒரு சாலை உள்ளது.
சென்னையில் இருந்து வேலூர், வாலஜா, கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் செல்ல ஒரு சாலை உள்ளது. எனவே சென்னை - சேலம் இடையே 3 சாலைகள் இருப்பதால் 8 வழி பசுமைச்சாலை தேவையில்லை. இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X